விடியலில் அவள்
இருள் சூழ்ந்த விழிக்குள்
இருளை போர்வையாக்கி
இமை தழுவிய
பவளமீன் கண்ணுடையவள்
அவளே...!
பவளப்பற்களை
பால்வண்ண
முத்து சிற்பியில்
சிறை பிடித்து வைத்தானோ
பிரம்மன்...!
அவளின் சிரிப்பில்
அரையுக ஆயுள் முடிவில்
தேவலோக தென்றலில்
மிதக்க செய்தவள்
அவளே... !
இமை இடியில்
இடிக்க செய்து
இயல்பு வாழ்வை விட்டு
காதல் பிரிவில்
காமக் காதலை வென்று
சென்றாளோ
யுகஆண்டு பிரிவில்...!
~மழை ~
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
