உரிமை

வா...அழகே...
வான் நிலவே...
இவ்வூரார் எல்லாம்
காணும்படி....
தினம் நீ வலம் வந்தாலும்
எனக்காக நீ
உதயமானவள் என்பதை
எப்போது நீ..
தெரிவிக்கப்போகிறாய்...
உன் உற்றார் என் உறவினருக்கெல்லாம்...

காதலிக்கக் கூடாதென்று
என்னைக் கண்டிக்க
யாருக்கும் இங்கே உரிமையில்லை...
அழகே...அது உனக்கும்தான்...

நீ என்னை விரும்புவதும்..
காதலிக்க மறுப்பதும்....
உன்னுரிமை கண்ணே...!
நான் உன்னை விரும்புவது...
உனக்கு இன்னும் தெரியாதப் பெண்ணே...?

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Mar-17, 9:55 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : urimai
பார்வை : 197

மேலே