காதல் நோய் உண்டு செய்தவள்

அன்பே... அழகே...
எந்நாளும் என்னைக் கண்டு
எனக்குள் காதல் நோவை உண்டு செய்து
நீயென் பக்கத்தில் இல்லாமல்...
தள்ளி நிற்பது எதற்கு?

அந்நோயால்...
தினம் -நான்
அல்லல்பட்டுக்கொண்டு இருக்கிறேன்..
அதை நீ அறியாது....
ஆனந்தமாய்....
அங்கே இருந்தால்..
உன்னால் உண்டான
காதல் கடும் நோய்க்கு
மருந்தென்று தரப்போகிறாய்...நீ?!

என்னை குணமாக்க வாயே...விரைவில்...
வெகு அருகில்...

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Mar-17, 9:42 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 118

மேலே