வாக்காளர்கள்

நேற்று வரிசையில்
நின்றோம்

உரிமையை விற்க

வரிசையில் நின்று

உரிமையை விற்றபின்

இன்று வரிசையில்
நிற்கின்றோம்

உரிமையை பெற!

கால் கடுக்க நிற்பது

வாடிக்கையாய்!

நாளை வரிசையில்
கைய்யேந்தி நிற்போம்,

இலவசங்களுக்காக!

நாங்கள் தான்,

பெருமைக்குரிய

ஜன நாயக
வாக்காளர்கள்..,
#sof #sekar

எழுதியவர் : #sof #sekar (11-Mar-17, 8:45 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 159

மேலே