பறவைகள் பலவிதம்
அழகிய வெள்ளை மாளிகை
நகர்ந்து செல்கிறது
சிக்ரா பறவை
வலசை போன ஈழத்து பறவைகள்
திரும்பவில்லை
பருவநிலை
முறிந்த காதல்
எடுத்துடைக்கிறாள்
பஃபின் பறவைகளை
காக்கை குஞ்சுகள்
முதிர்ச்சியடைந்து வருகிறது
ஒரு குயிலிசை
பசுமையிழந்த மரம்
சிவந்திருந்தது
குயிலின் கண்கள்
கறுத்த மழைமேகம்
மேலிருந்து விழுகிறது
ஒரு வானம்பாடி
குளத்தில் குழந்தை
தலை நனைக்க மறுக்கிறது
தாமரை மேல் குருவி
அடர்ந்த காடு
நடுநிசியில் விழிக்கின்றன
மரங்கொத்திகள்
- கி.கவியரசன்