தட்சணை-வரதட்சணை

உனக்காக துடிக்க துணிந்த இதயத்தையும்
பொத்தி பாதுகாத்த கற்பையும் உதாசினப்படுத்தி
உன் வீட்டிற்கு வர தட்சணை (வரதட்சணை) கேட்டாய்
சிந்தித்தேன்
பொன்னிற்கு உள்ள மதிப்பு
பெண்ணிற்கு இல்லையோ?
துணிந்து முடிவெடுத்தேன்
உன்னுடைய தேவைக்கு வரப்போவதில்லை
என்னை தேடியவனுக்கு வரமாகி போவதென்று
நீ இனி திருந்தி வாழ போவதுமில்லை
நான் உன்னை திரும்பி பார்க்க போவதுமில்லை
பெண் பிள்ளைக்கு தகப்பனாகி அவளை கரையேற்ற தவிக்கும் அந்நாளில்
என் போன்ற பெண்களின் மனதை எண்ணி உன் மனமும் பரிதவிக்கும்
இன்று இல்லை என்றாலும்
அன்றாவது மாறிட துணி மானுடா!!!
-என்றும் அன்புடன் ஷாகி