திருப்பிக்கொடுப்பாயா
உனக்குப் பிடிக்குமென
சமையல் கற்றேன்!
சேலைதான் சோலை என்றாய்
சுடிதார் துறந்தேன்!
அழகாய் புன்னகைத்து
அவசரமாய் சமையல் செய்து
அளவாய் ஊடலாடி
அரவணைத்து உறவாடி
என்னையே மறந்தேன் நான்!
உன் விழியில் என்னைக் கண்டேன்!
பழகப் பழக பாலும் புளித்ததோ!
கணவன் மனைவி உறவும் கசந்ததோ!
துரோகத்தைப் பரிசளித்தாய்!
துயர் தந்து விலகி நின்றாய்!
விலகிச் செல்லும் கணவனே
விட்டுக் கொடுத்தவற்றை
திருப்பிக் கொடுப்பாயா...!