கலங்குது நெஞ்சம்

என் நெஞ்சு குமுறி வெடித்தது
இவனைக் கண்டதும்
இவன் தோள்தாங்கும்
சுமை கண்டதும்
என் உடலில் செந்தணல் சுட்டது

என்னிடம் நான் இல்லை
இவனோ சிறு பிள்ளை
தொட்டால் ஒடிந்து விடும்
சிறு முல்லை
ஏனடா உனக்கு
இப்போதே பெருந்தொல்லை
இன்னும் நீ வாழ்வைத்
தொடங்கவே இல்லை

உனக்கு நடந்தது என்ன மாயம்
நம் சமூகத்தில் ஏன்
இத்தனை காயம்
இது என்ன சோகம்
இவள் தோள்களில் ஏன்
இப்போதே பெரும்பாரம்
இதைக் கண்டு
நனைய வில்லையா
உன்கண்ணின் ஓரம்
சுரக்க வில்லையா
உன்நெஞ்சில் ஈரம்

புத்தகப்பை சிறுபிள்ளை உடன்பிறந்த பெண்மகவை
தோள்தாங்கி வீதியிலே வயிற்றை - கழுவுதற்காய்
எங்கும் அலையுவதை வாடி வதங்குவதை
கண்டு கலங்காதா நெஞ்சம்

எழுதியவர் : alaali (16-Mar-17, 6:33 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kalankuthu nenjam
பார்வை : 202

மேலே