மலர் மஞ்சம்

நெஞ்சங்கள் நிறைந்துநிற்கும் அன்னம் - அவள்
நித்திலத்தில் கடைந்தெடுத்த கிண்ணம்
தஞ்சமென நினைக்க வைக்கும் மஞ்சம் - அவள்
தண் வடிவோ இளநெஞ்சை கிள்ளும்
வஞ்சியரும் ஆசை கொள்ளும் உருவம் - அவள்
வாளிப்பாய் மிளிர்கின்ற பருவம்
கொஞ்சுமொழி வார்த்தைகள் கவரும் - அவள்
கூந்தலிலே செங்காந்தள் மலரும்

எல்லோரின் மனங்களிலோர் தவிப்பு - அவள்
ஏகஇறை செதுக்கிவைத்த வனப்பு
அங்கங்கள் எங்கணுமே செழிப்பு - அவள்
ஆடவரின் கண்களுக்கோர் களிப்பு
மங்கையறிரில் இவளழகோர் தனிப்பு - அவள்
மற்றவரின் கண்களுக்கும்பெரு ரசிப்பு
தங்கம்போல் செதுக்கிவைத்த படைப்பு - அவள்
கண்டவுடன் யாவருக்கும் விருப்பு

உள்ளமதை கொள்ளையிட்ட ரதியாள் - அவள்
உயிரைவிட நேசிக்கும் மதியாள்
கள்ளமில்லா நெஞ்சங்கொள் குயிலாள் - என்னை
கவர்ச்சியினால் தீண்டிவிட்ட மயிலாள்
பள்ளிகொள்ளும் வேளையிலும் வருவாள் - தினம்
பலநூறு முத்தங்கள் தருவாள்
கள்ளியவள் கரைமேற்ப்பேன் ஒருநாள் - பின்
காலமெல்லாம் இருவர்க்கும் திருநாள்

எழுதியவர் : alaali (16-Mar-17, 7:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 151

மேலே