வேலை

;
;
;வேலை தேடும் வேளை
தினம் சோர்ந்து போகும் காளை
படித்தும் வேலை இல்லை
கிடைத்தும் பிடித்த வேலை இல்லை

மாட்டை காட்டை விற்று
ஏட்டு படிப்பை கற்று
எனக்கும் வேலை உண்டு
என்றே கனவும் கண்டு

தோற்று போக நாளும்
என்னை தேற்ற இல்லை யாரும்
வேலை அடித்து பிடுங்கி பார்க்க
உதவாதே நம் வீரம் ???

கணினி வேலை வேண்டாம்
கணக்கர் வேலை வேண்டாம்
போலி பெயரில் பேசும்
கால்சென்டர் வேலை வேண்டாம்

மனது விரும்பி செய்ய
என் தந்தை வேலை இருக்கு
அதை பாதுகாத்தா போதும்
அந்த தெம்பு எனக்கிருக்கு

விவசாயம் சாக கிடக்கு
வாடா தம்பி தூக்கி நிறுத்து

எழுதியவர் : ருத்ரன் (16-Mar-17, 11:12 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : velai
பார்வை : 197

மேலே