இடைவெளியில் இரு இதயம்

உன் மடியில்
என் விழிகள்
உறங்கிடவே..
என் உறக்கம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!
உன் வழியில்
என் தடங்கள்
நடந்திடவே..
என் பயணம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!
நீயுமின்றி
நானுமிங்கே
இருந்திடவே..
என் இமைக்குள்ளே
நீரும் தேங்கி
இருந்திடுதே..!!
எந்நாள் உன்னைச்
சேர்ந்திடுவேன்..
என் கவிதை உன்னில்
சேர்த்திடுவேன்..!!
நாட்களும் இங்கே
நகரவில்லை..
நறுமணம் கூட
புரியவில்லை..
காரணம் நீயேதான்
வேறில்லை..!!
எதிர்பார்க்கும்
என் கண்களில்
என்று உன்னைக்
காண்பேனோ
என் காதலே..??
செ.மணி