மீசையும் நாமும்

பதின்பருவ பயிரென உனை
யான் பார்த்து பார்த்து வளர்த்தலுண்டு
பருவத்தே முளைவிட நீ மறுக்க
இவன் ஆணிலன் எனும்வசை கேட்டலுண்டு..
முறுக்கு மீசை ஆசை கொண்டு
தினம் எள்எண்ணை வைத்து காத்தலுண்டு
முளைத்த பருவம் முதற்கொண்டு
சிறு வெற்றிக்கென முறுக்குதலுண்டு..
காதலென்று கொள்ளும் போது
அவளுக்காய் சிறிது மழித்தலுண்டு
காலம்கழித்து கலவுதல் போது
அவளாசை கடியில் மகிழுதலுண்டு..
கம்பன் இளங்கோ பல பயின்றும்
ஏனோ முகம்அது நினைவில்லை
கவி அறியா காலத்தே எனக்கு
முண்டாசு போல் வேறு புலவனில்லை..
மழித்தலும் நீட்டலும் வேண்டாமென்று
வள்ளுவன் அன்று உரைத்தல்போதும்
யாம் வள்ளுவனுக்கே நீட்டல்கொண்டு
வீதிகொன்றாய் சிலை கொண்டோம்..

*(குறள் 280:மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்)



$வினோ..

எழுதியவர் : வினோ.... (17-Mar-17, 9:22 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : meesaiyum naamum
பார்வை : 231

மேலே