இதயத்தில் உயிரோவியம் நீ

உள்ளம் உருகி
ஒழுகும் துளியில்
ஓவியங்களாகின்றதே !
கள்ளமில்லா இதயச்சுவரில்
காவியங்கள் எழுதுகின்றதே
பள்ளம் நோக்கி பாயும் நீராய்
பாசம் தேடி என் உயிரும் கரைந்து ஓடுதே !
ஒளியைத் தேடி வளரும் செடியாய்
எந்தன் பயணம் செல்லுதே
களியால் செய்த உடல்
மண்ணுள் சென்றாலும்
நாழிகையில்நானெழுதும்
வரிகள் நானிறந்தும் வாழுமே !
அடைகாத்த பறவையாக
ஆசைகள் அடங்கிக்கிடந்ததே
குஞ்சின் கீச்சல் கேட்டதுமே
ஆசை இறக்கை முளைத்து பறந்ததே
கொள்ளை அழகில்
கோடியின்பம் மின்னுதே
கொள்ளை போன மனதின்
இடைவெளியில் வண்ண ஓவியம் வரையுதே
அறிவுக்கெட்டும் வரிகளை
ஆசையோடு பதிக்கின்றேன்
ஆவலோடு இதயத்தில்
இடம் கேட்டுக்கிடக்கின்றேன்
உன் உயிரின் துடிப்பு கேட்கவில்லை
என் நாடித்துடிப்பு நின்றதே
பறந்த பறவையின்
சிறகிலிருந்து பிரிந்த
இறகாய் தெருவில் விழுந்து கிடந்தேன்
உன் சுவாசக்காற்றிலெழுந்து
நானும் பறந்தேன்
எண்ணச்சுரங்கம் மேலே எழுந்து
உன்னை எழுத சொல்லுதே
வண்ண மலரின் வாசம்
என்னை தூக்குதே
இதய வெளியில்
மாய நதிகள் ஓடுதே
சித்தமெல்லாம் தேனாய் தித்திக்கின்றது
சில்லென்ற காற்றோடு
இதயம் உருகி அவளின்
உருவம் வரைகின்றது
ஒதுக்கி வைக்காத
நினைவாக நாட்கள் இனிமையாக
கழிகின்றது
-மட்டுநகர் கமல்தாஸ்.