என்னை விட்டு விடுங்கள்

இப்படியே வாழ்கிறேன்
என்னை விட்டு விடுங்கள்
தனிமையை நானும் தேடுகிறேன்
தந்து விடுங்கள் தோழர்களே
உங்களால் எனக்கு சிரமம்
நீங்கள் அனுபவிக்க நான்
அவமானப்படுகிறேன் தான்
தினமும் அழுது அழுது
என் உடல் சாம்பலாகிறதே
யார் அறிவார் இதை
ரசித்து ரசித்து எனை
கருணை கொலை செய்வது தகுமோ
தூர செல்லுங்கள் எனை விட்டு
உங்கள் தனிமைக்கு நான் தேவை என்றால்
என் தனிமைக்கு நீங்கள் தேவையே
என்னை விட்டு விடுங்கள்
என்னை விட்டுவிடுங்கள் ...............................

எழுதியவர் : தே.பிரியன் (20-Mar-17, 1:26 pm)
பார்வை : 202

மேலே