மறைக்கப்பட்டவை

புறாக்களே உங்கள் மூதாதையர்
கடிதங்களை காலில் சுமந்த
காலங்கள் வெறுமையானது நீர்
காதலில் விழுந்ததால் என்னவோ
பாடப்புத்தகத்தில் படித்தேன் அன்று
உம் வீர வரலாறு கண்டு திகைத்தேன் இன்று
போருக்கு போகும் முன் மன்னன்
தோள்களில் நிற்பவன் நீ மட்டும் தான் என்று
தூது போன புறாவே உன் காதல் தூது செல்ல
யார் வருவார் ..நான் வரவா .................
நிலையில்லா உலகில் உன் காதல்
மட்டுமே எமக்கு புதுமையாய் தெரிகிறது ஏனோ
உன் வீர வரலாற்றை தவிர

எழுதியவர் : தே.பிரியன் (20-Mar-17, 1:31 pm)
பார்வை : 115

மேலே