கிராமியக் கவிதை

கும்மியடிப்போம் வாங்கடியோ ---- !!! --- கிராமியக் கவிதை


செந்தமிழ்ச் செழிக்க வேண்டுமடி !
செந்நெலும் கதிராக வேண்டுமடி !
பைந்தமிழ்ப் பொங்கிட வேண்டுமடி !
அந்தநாள் வந்திட வேண்டுமடி !
எந்தநாளும் பெண்களே கும்மியடி !!!!


கல்வி சிறந்திட வேண்டுமடி !
கற்றவர் மேன்மையும் வேண்டுமடி !
பலகலைகள் நிறைந்திட வேண்டுமடி !
பாரெங்கும் ஒலித்திட வேண்டுமடி !
பாங்காகப் பெண்களே கும்மியடி !!!!


வீரத்தைப் போற்றிட வேண்டுமடி !
விந்தைகள் பல்கிட வேண்டுமடி !
முத்தமிழ் ஓங்கிட வேண்டுமடி !
எத்தனங்கள் மாறிட வேண்டுமடி !
மொத்தமாய் பெண்களே கும்மியடி !!!!


காதலும் வாழ்ந்திட வேண்டுமடி !
காளையர் வீரமும் வேண்டுமடி !
தீதலும் நீங்கிட வேண்டுமடி !
தீபங்கள் ஏற்றிட வேண்டுமடி !
திக்கெட்டும் பெண்களே கும்மியடி !!!!


நல்லறம் பேணிட வேண்டுமடி !
அல்லவை அழிந்திட வேண்டுமடி !
சொல்லதும் சிறக்க வேண்டுமடி !
உள்ளவை உலகிற்கு வேண்டுமடி !
கூடியே பெண்களே கும்மியடி !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Mar-17, 4:25 pm)
பார்வை : 83

மேலே