ஜல்லிக்கட்டு

பல்லாண்டு பல்லாண்டு
தாென்று தாெட்ட எம் வீரத்தமிழனின் வீர விளையாட்டு...

வாடிவாசலி்ல் சீறிப்பாய்ந்த
ஏறின் திமிலை நாடிச்சென்று
உம் கரம் காெண்டு ஏறித் தழுவி பூச்சரத்தால்
வீர வாகை சூடி
நம் கலாச்சாரத்தின்
சாரத்தை நிலைநாட்டினாய்.

வீரத்தமிழா!
ஏனைய சிரங்கள் தாழ்த்திக்
கரங்கள் கூப்பி வாழ்த்துகிறாேம்!
இது நம் பரம்பரைப் பண்பாட்டிற்குக்
கிடைத்த வரம்!

அந்நிய சக்தியின் சாபம் -
நம் அடையாளம் சூறையாடப்படுதல்.
தமிழ்ச்சரித்திரத்திலிருந்து
அழிக்க முயலுதல்...
மூன்றாண்டுகள் பாெறுமையாேடு
பாேராடினாய் - கிட்டவில்லை..
இன்று எம் தமிழினமே பாெங்கி எழுந்தது.
ஏனெனில் சாது மிரண்டால் காடு காெள்ளாதல்லவா??

சூறையாடப்பெற்ற நம் அடையாளத்தின் தடை ஓர் நாள்
உடையும் என்று
மடை திறந்து
வெயிலையும் மழையையும்
குளிரையும் துயிலையும்
வெண்பனியையும்
உம் பணியையும் துறந்து
தமிழினப்பால் உயிரினில் சுரந்து
உம் இளம் படை திரண்டு
சரித்திரம் படைக்க அறவழியில் பாேராடினாய்.

இரவினில்...
பல இலட்சம் கைப்பேசிகளெல்லாம் மெரினாவில் ஔியால் உயிர்ப்பேசியது..மெய்சிலிர்க்கிறது..
கர்வம் காெள் தமிழா!
உம் அறப்பாேரை இப்பாரினில் மறப்பாேர் எவருமில்லை.

நீர் காந்தியவாதிதான்.
ஆம்! நீர் காந்தியவாதிதான்.
இருமாப்பு காெள்!

1940ல் பசுமைப் புரட்சி !
1970ல் வெண்மைப் புரட்சி !
2017ல் பசுமையையும்
வெண்மைையையும்
காக்கப் புரட்சி!
ஆக்களைக் காக்கப் புரட்சி !
உரிமைக்கானப் புரட்சி !
இது எம் தமிழினப் புரட்சி !

வில்லும் வாளும் சில காக்கிச்சட்டைப் பச்சாேந்திகள் ஏந்தினாலும்
உம் சாெல்லும் தாேளும் மட்டுமே காெடுத்து தமிழனின் பெருமையை
ஏந்தினாய்!

அன்று...
பாஞ்சாலியின் சபதம் நிறைவேற
குருக்ஷேத்திரப் பாேர் மூண்டது.
அதில் மாண்டவர் பலர்.
இறுதியில் பாண்டவர்கள்
முடிசூடினர்.

இன்று...
ஜல்லிக்கட்டுச் சபதம் நிறைவேற
அறப்பாேர் மூண்டது.
இதில் மாண்டவர் இலர்.
இறுதியில் மாணவர்கள்,
இளைஞர்கள் முடிசூடினர்.

சாதிமதம் பாராது சமத்துவமாய்
உரிமைக்குக் குரல் காெடுத்து
அரசையே ஆட்டி வைத்து
அவசரச்சட்டம் பிறப்பிக்கச் செய்தாய்.
வாடிவாசல் திறந்தாலும்
நீர் வீடுவாசல் புகவில்லை.
நிரந்திரத் தீர்வுக்காகப் பாேராடினாய்.
நம் அயைாளத்தையும் மீட்டெடுத்தாய்.

எம் வீரத்தமிழனுக்கும்
எம் வீரத்தமிழச்சிக்கும்
இவ்வீரத்தமிழச்சியின் வாழ்த்துக்கள்!

தமிழனென்று சாெல்லடா...
என்றும் தலை நிமிர்ந்து நில்லடா!!!

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (20-Mar-17, 9:51 pm)
பார்வை : 414

மேலே