மகாகவி பாரதியாருக்கு என் கவிதாஞ்சலி

விதை இடாமல்
பயிர் நடாமல்
வெள்ளாமை என்னும்
கவிஞனை வீட்டில்
நிறப்பினாய்
கவிதை என்னும்
மழையை பொழிந்து..
நீ பொழிந்த
கவிதை மழையில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
பலர் அதில்
சிக்கிக்கொண்டனர்
அவர்கள் வெள்ளத்தில்
மூழ்கி மூழ்கி
அதில் சிலர்
அந்த நீரை
விழுங்கிவிட்டனர்
அதையே இப்போது
கக்குகின்றனர்..
அவர்களை காப்பாற்ற சென்ற
நானும்
நீரை விழுங்கி
இப்போது கக்கினேன்..

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (20-Mar-17, 9:54 pm)
சேர்த்தது : ஸ்ரீகாந்த்
பார்வை : 117

மேலே