ஒரு பாவியின் மனு

ஒரு பாவியின் மனு

கடவுள் இன்னும் என்னை அன்புடன் காண்கிறானா?.
அவன் மேலிருந்து கீழே காண்கிறானா??..
அவன் அருகிலிருந்து அமைதியாக கண்ணீர் வடிக்கிறானா???...
அவன் என்னுள் இருந்து ஏங்குகிறானா????....

அவனுடைய மகனாகிய எனது உண்மையான அழைப்பு அவனுக்கு கேட்குமா???...
நான் ஏன் தொடர்ந்து வீழ்ந்துக் கொண்டிருக்கிறேன்???..
இந்த பாவி என்றென்றும் அழவே,
உடைந்த சிறகுகளால் என்றும் பறக்க முடியாது....
இப்போது இதை நான் தான் மாற்ற வேண்டும் போலும்......
நான் என்ன சொல்ல?...

ஆனால், ஏனென்று தெரியவில்லை.
நான் பிரார்த்தனை செய்வதில்லை......
இறுதியாக எதை எடுத்து என்னை உடைக்கப் போகிறான்???...

எனது இருதயத்தின் உண்மையான விருப்பம் என்னவென்று காட்டும் ஏக்கத்துடன் தீ அணையாது எரிகிறது....

இழப்பு ஒன்றே எப்போதும் என்றால் இதற்கான இறுதி செலவு என்னவாக இருக்கும்???....

நான் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் சுதந்திரமாக....
ஆனால்,
இது எனது இருதயத்தின் உண்மையான மனு.....
நான் செய்ததெல்லாம் சரிதான் என்று எனது பார்வையால் பார்க்க முடியாது,
இன்னும் எனது கண்கள் மூடப்பட்டுள்ளதால்....


Close (X)

8 (4)
  

புதிய படைப்புகள்

மேலே