மனதில் முளைத்த ஆசைகள்
வெண்மேகத்தினை மெதுவாக உதிர்த்து அதை அள்ளி முகத்தில் பூசி கொள்ள ஆசை...
நட்சத்திரங்களை ஊசி நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ள ஆசை...
மாலை சூரியனின் மஞ்சளை எடுத்து குழைத்து முகர்ந்து பார்க்க ஆசை...
கைப்பிடி அளவு மண்ணை அள்ளி எண்ணி முடித்து பெருமிதம் கொள்ள ஆசை...
வெட்டப்படாத வைரக்கல்லை தொட்டு ரசிக்க ஆசை...
ரோஜா மலரும் அற்புதத்தை அருகிலிருந்து கண்டு பிரமிக்க ஆசை...
சிப்பிக்குள் மிளிரும் முத்தினை எடுத்து முத்தமிட ஆசை...
ஆலங்கட்டி மழையின் கட்டியை எடுத்து பல்லாங்குழி விளையாட ஆசை...
இவை அணைத்தும் நடக்க வாய்ப்பில்லை என்று தெறிந்தும் அனைத்தையும் என் கவியில் உலகிற்கு உறக்க சொல்ல ஆசை...
-என்றும் அன்புடன் ஷாகி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
