விழிகள் பேசும் மொழிகள்

அழகான பெண்களின் நடுவில் நான் நிற்கையில்
அவலட்சணமான என்னை எண்ணி அலுத்துக்கொள்கிறேன்..!!
அலட்சியமாய் உன் விழிகள் என்னை கடந்தால்
அழுதுவிடத்தோன்றுகிறது எனக்கு..!!
பெண்ணின் கண்கள்
போதை கொள்ளவைக்குமாம்..!!
அது சரி..!!
உன் விழிகளில் இந்த பேதை பெண்ணை
பித்துபிடிக்க வைத்தது பற்றி யார் அறிவார்கள்??
தினமும் உன்னை அளக்கும் என் விழிகள்
நேருக்கு நேராய் ஒரு கணம் நீ பார்த்தாலும்
நினைவிழந்து நிற்பது யாருக்கு தெரியும்??
காதல் மொழி பேசும்
உன் கண்களைக் கண்டால்
கவிதை மொழியாக
என் செவிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுவிடுகிறது..!!
விழிகளின் மொழிகளால்
என்னை வியக்க வைப்பவனே..!!!
விதி நம்மை இணைக்கவேண்டுமென்பதே
என் வேண்டுதலாயிருக்கிறது..!!
வேதனையை தந்துவிடாமல்
விரைவில் விழிகளின் மொழிகளை
மொழிபெயர்த்துவிடு..!!