என் பாவங்கள்

நினைவுகளாய்
என்னை துரத்தும்
என் பாவங்களே

இன்னும் எத்தனை காலம்?
இன்னும் எத்தனை தூரம்?

ஓடி ஒளிய இடமும் இல்லை
நின்று எதிர்கொள்ள தைரியமும் இல்லை

நான் அறிவேன்
என் உயிர் உள்ளவரை
உங்கள் துரத்தல் நில்லாது

நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்
ஒரு தினம் வரும்
அதிலொரு கணம் வரும்

உங்களை வெற்றிகொள்ள
என் உயிரையும் துறப்பேன்

என் கல்லறையில் பொறிக்கப்படட்டும்
அன்பளிப்பு நீங்களென்று

அன்றுமுதல்
பாவங்களே
இந்த பாவம்
உங்களை துரத்தட்டும்
நினைவுகளாய்....

எழுதியவர் : வினோத் srinivasan (25-Mar-17, 11:15 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : en paavangal
பார்வை : 606

மேலே