நவீன பாரதி யாரும் இல்லை

இன்று பாரதி இருந்தால் தன் கவியால்,
அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அசிங்கங்களை சுரண்டியிருப்பார்,
ஆளுமையை கண்டு அஞ்சியிருக்க மாட்டார்.
கல்வியில் சாதியின் சாயத்தினை கழுவியிருப்பார்,
கல்லாமல் ஒரு குழந்தையையும் வளர விட மாட்டார்.
புதுமையில் சீரழியும் பெண்களுக்கு சீறிய புத்திமதி சொல்லியிருப்பார்,
புறக்கணிப்பவர்களை கண்டு வெகுண்டோட மாட்டார்.
பெண்களை போக பொருளாக நினைக்கும் ஆண்களுக்கு நல்ல பாடம் கற்பித்திருப்பார்,
பெண்கள் முன்னேற்ற முயற்சியில் வெற்றி காணும் வரை ஓய்ந்திருக்க மாட்டார்.
குடிசைகளில் வாழும் மக்களுக்கு கை கொடுத்திருப்பார்,
கூத்தாடிகளோடு கைக்கோர்த்திருக்க மாட்டார்.
எண்ணமும் செயலும் ஒன்றென செயல்படுவார்,
எள்ளளவும் அதிலிருந்து மாறுபட மாட்டார்.
பாரதியார்போல் எவர் தோன்றினாலும்-அவர் பாரதியாராக ஆக மாட்டார்...
-ஷாகி