உமையாள் திருப்புகழ்

"தனனனன தனனனன தானத் தானத் - தனதான"

நினதுமல ரடியிலெனை நீவைத் தாளக் - கடவாயே
. நினையுமுள மடையவழி தாவிப் பாருக் - குரியாளே
எனதுபழ வினையகல நேசப் பார்வைக் - கணைவீசி
. எழில்விளைய அருளிடடி மாயக் காரர்க் - கினியாளே
மனதிலெழு முறுதி,களி வீரக் கோலத் - திறன்யாவும்
. மகிமையென மொழிவனடி ! வானத் தேவர்க் - கொளியாளே
புனையுமணி அசையவுமு லாவித் தாவிக் - கடலோடு
. புனிதநடம் புரியுமுய ரீசற் கேநற் றுணையாளே

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:31 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 40

சிறந்த கவிதைகள்

மேலே