Mr BLACK HAIR Mr BALDEN

நானும் நீயும் ஒரே வயசுதான்
உனக்கு இத்தனை கருமையாய் அழகாய் முடி சிகை
எப்படி ?
எனக்குப் பார் முழுசும் சொட்டை வழுக்கை !
என்ன மூலிகை தைலம் தேய்க்கிறாய்
என்ன ஆயுர் வேத எண்ணெய் பயன்படுத்துகிறாய்
சொல்லு என்றார் நண்பர் .
Mr . BLACK HAIR சொல்லவில்லை.
தினம் நச்சரித்தார் நண்பர் . ஆனாலும்
சொல்லாமலே தட்டிக் கழித்து வந்தார்
கருமுடி மன்னன்.

அப்படி என்ன எண்ணெய் தேய்க்கிறார் என்று தெரிந்து
கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் அவர் இல்லாத போது அவர்
வீட்டிற்கு சென்றார் Mr . BALDEN !
அவர் மனைவி வரவேற்று உட்கார செய்து காஃபி கொண்டு வர
சமையல் அறைக்குச் சென்றாள்.

ட்ரெஸ்ஸிங் மிரர் முழுதும் தேடினார் . ஊ ஹூம் ....அப்படி
ஒரு எண்ணையையும் காணவில்லை . மேசை ஓரத்தில்
ஏதோ பொருள் தென்பட்டது . கையால் தொட்டுப் பார்த்து
கையில் எடுத்துப் பார்த்தார் .
மனைவி சிறு நமுட்டுப் புன்னகையுடன் கையில் கா ஃ பையுடன்
வந்தார் .
பாத் ரூமிலிருந்து தலையை ? துவட்டியவாறே நண்பர் வந்து கொண்டிருந்தார் .

எந்த முடி இவடே ஆள் அவடே ......!!!!!! என்று உரக்கவே கத்திவிட்டார் முதல் பால்டன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-17, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 209

மேலே