என் காதல் பல வழிகளில் சொல்லிவிட்டேன்

கண்களின் பார்வை வழி காதலை சொல்லியாயிற்று !
காகிதத்தின் எழுத்து வழி காதலை சொல்லியாயிற்று !
கணிப்பொறி வழி காதலை சொல்லியாயிற்று !
இதழின் வார்த்தை வழி இனிதாய் காதலை சொல்லியாயிற்று !
அன்பின் வழி ஆசையாய் சைகையில் காதலை சொல்லியாயிற்று !
தோழியின் தூது வழி காதலை சொல்லியாயிற்று !
அலைபேசி வழியாய் காதலை சொல்லியாயிற்று !
அத்தனை கவிதையும் உனக்கெனவே என உணர்த்தி காதலை சொல்லியாயிற்று !
இத்தனை வழியிலும் என் காதல் சொல்லியாயிற்று -உன்
இதயத்தின் உள் ஒளித்து வைத்த காதலை எப்பொழுது சொல்லப்போகிறாய் !
இன்னும் ஒரு வழி இருக்கிறது என் காதல் சொல்ல ?
அவ்வழி சொன்னால் ..நிச்சயம் உன் காதல் சொல்வாய் !
சொல்லட்டுமா ??????