அருகில் வந்த காலம்
விழி பார்க்க தயங்கி
மொழி இன்றி தவித்து
என்னுள் மறைத்த காதலை
உன்னுள் கலந்து உரைக்க
காலம் அருகில் வந்ததே !
மணி சரி பார்த்து
பணி முடிக்கும் நேரம்
காலம் அருகில் வந்ததே !
வாராதென நினைத்த நாள்
வந்து என்னிடம் சேரும்
காலம் அருகில் வந்ததே !
நினைத்த காலம் இங்கு
நீடித்து என்னிடம் நின்றிட
காலம் என்றும் வாராதோ !

