பறவைகளின் பள்ளிக் கூடம்- பாப்பா பாடல் - 2
![](https://eluthu.com/images/loading.gif)
...............................................................................................................................................................................................
............பறவைகளின் பள்ளிக் கூடம்- பாப்பா பாடல் - 2
பட்டிக்காட்டில் பள்ளிக்கூடம்;
........ பறவைகள் படிக்கும் பள்ளிக்கூடம்...
முட்டையிடுதலில் தொடங்கி நிதம்
......... முழுமையாகக் கற்று தரும்...
தூக்கணாங் குருவி கூடுகட்ட
........... தொடர்ந்து கற்றது அங்கேதான்...
தேக்கு மரத்தை துளைத்தெடுக்க
........... மரங்கொத்தி கற்றதும் அங்கேதான்...
பாட்டுப்பாடி தனை மறக்கும்
........ மாணவப் பறவை இருந்ததுவாம்..
பாட்டு நினைவில் பள்ளி செல்லும்
......... பாதை கூட மறந்ததுவாம்..
கூடு கட்டும் கலையதற்கு
.......... கொஞ்சம் கூடத் தெரியாதாம்..
தேடிப் பிடித்துப் படிக்காமல்
.......... தேர்வில் அதனை விட்டதுவாம்..
இன்று வரைக்கும் பிறர் கூட்டில்
......... குயிலாள் முட்டை இடுகின்றார்....
அன்று படிக்கத் தவறியதால்
........ சோககீதம் பொழிகின்றார்...