மூடி திறந்திடும் உதடுகளிலா
பல்லவி:-
மூடி திறந்திடும் உதடுகளிலா
கண்களினிலா இதயத்தினிலா
பொல்லாத காதலை
நீ பதுக்கி வைத்திருந்தாய்
சொல்லாமல் உயிரிரை
ஏனடி படுத்தி எடுக்கின்றாய்
பூ ஒன்று புயலை
போருக்கு அழைக்குது
மாதொன்று மலையை
மளனமாய் சாய்க்குது
வெள்ளாடு புலியை
முட்டத்தான் பாக்குது
கொக்கொன்று சுறாவை
வலையத்தான் வீசுது
அனுபல்லவி:-
அங்குமிங்கும் தென்றல் உன்னை
சீண்டி போகயில
தாங்காம வெடிக்கும் நெஞ்சு
இலவம் பஞ்சாக
சிதறிகிடக்கும் அழகை மொத்தம்
கோர்த்து எடுத்தவளே
சதிகார கண்கள் சுற்றிலும் உன்னை
கொத்தி தின்னுமடி
உதறி எறியாதே என்னை
வெளிவிடும் மூச்சாய்
திணறி போகும். நான்
வாங்கும் மூச்சே
பொல்லாத காதலை
நீ பதுக்கி வைத்திருந்தாய்
சொல்லாமல் உயிரை ஏனடி
படுத்தி எடுக்கின்றாய்....
""முடி துறந்திடும் ""என்ற ஆல்பத்தில்
நான் எழுதிய வரிகள். யூ டியூபில்
வீடியோ பாடலாக பாருங்கள்