நினைவெல்லாம் நீயே

கடலும் சில நேரம் இளைப்பாறும்
கவியும் குயில் பாட ஏங்கி நிற்கும்
புவியும் மயில் ஆட மயங்கி போகும்

என் காலமெல்லாம் போகுதடி
போனபின்னே வாழ்ந்து என்ன
என் காலமெல்லாம் போகுதடி
போனபின்னே வாழ்ந்து என்ன

உன் நினைவு படுத்தும் பாட்டில்
என் கனவும் களைந்து போக
நானும் உறங்க முடியல
நாளும் கடந்து போகல

உயிர் பிரியும் தருணம் நிகழும்
அந்த காலம் வரும் மட்டும்
உன் மடியில் ஒரு அடைக்கலம் தந்தால் போதும்

மண் உயிர் பெற
மழை தேவை
நான் உயிர் பெற
உன் கடைக்கண் பார்வை தேவை...


எண்ணம் ஓய்வதில்லை
அது தேயவ்தும் இல்லை

கடல் வற்றும் என்றால்
காதல் முற்றும் என்பேன்

கயல் கரையில் வாழும் என்றால்
புயல் பூமியை சேராது என்பேன்

கடலை கடந்த புயல்
மழையை கொண்டு செல்லும்

காயம் கண்ட மனம்
மழையை விட்டு செல்லும்

காதல் கொண்ட மனம்
கம்பனை தன் பாட்டனாக்கிக்கொள்ளும் ....

எழுதியவர் : சுந்தர்ராஜ் (30-Mar-17, 11:37 pm)
பார்வை : 861

மேலே