புவியோரே புவியோரே சக்கரைவசன்

புவியோரே ! புவியோரே !!
**********************************************************
வருங்காலம் நல்லபடி எல்லோர்க்கும் அமைந்துவிட
ஆரவாரம் அல்லாத பக்திநிலை பெருகிவர
அறம்கொண்ட வழியினூடே சீராக பயணித்து
உருவாகும் பண்புதனை புவியெங்கும் விதைத்திடுவோம் !

உலகத்தில் எந்நாடும் கலகத்துள் நேராது
கொல்லுவதும் கொள்ளுவதும் கடந்திட்ட நிலையுற்று
நல்வாழ்வு ஒன்றுமட்டும் கருத்துடன் நாம்கொண்டு
தலைமகனாய் வாழ்ந்திடுவோம் தரணியில் என்றென்றும் !!

எழுதியவர் : சக்கரைவசன் (2-Apr-17, 2:22 pm)
பார்வை : 102

மேலே