அன்பே ஜீவன்
மனத்தூய்மையோடு வாழ்ந்தாலும், இந்த உலகம் நம்மையும் தவறான கண்ணோடு பார்க்கிறதென்று உணர்கையில், உணவை மறுக்கிறேன்..
பசி உணர்வை இழக்கிறேன்..
அன்பே சிவமென்று நாளும் வாழும் நம்மையே பழிக்கிறதே உலகம்..
கடவுளென யாருமில்லை என்றுரைக்கும் கூட்டமும், கடவுளென்றால் கல்லென்றுரைக்கும் கூட்டமும் அன்பே சிவமென்று அடியேன் உரைப்பதை ஏற்குமோ??..
குருடனிவன் ஏதோ கூறித் திரிகிறானென்று கூசாது உரைக்கிறது எனது காது கேட்கவே..
நான் குருடனா?
என்னை குருடனென்பவர்கள் குருடர்களா??
ஏதோ மன உணர்வுகளைப் புலப்பித்திரிகிறேன் அன்பே சிவமென்கிற பித்தனாய்..
கண்கள் கண்டு இரசிக்க உடல் அழகாய் இருந்தாலும் மனதிலுள்ள குறைகள் தானே உடல் நோய்களாய் வெளிப்படுகின்றன உலகம் உணர அத்தாட்சிகளாய்..
பூலோகமென்னும் பூங்காவனமதில் ஒவ்வொரு மனிதர்களும் வாடிவிடும் பூக்களாவதும், வாடாத மலர்களாவதும் அவரவர் எண்ணப்படியே..
அன்பே சிவமென்று அடியென் சித்திக்க, சிவமே ஜீவனென்றானதால்,
அன்பைத் துறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிணமே..
பிணமதில் பொறாமை, அழுக்காறு, பேராசை, தீயச் சொற்கள் மற்றும் தீயச் செயல்களைத் தனதாக்கும் ஒழுக்கமின்மை யாவும் ஜீவனென்று குடியேற, பிணங்களின் அட்டகாசமே அதிகமாகிவிட்டது