தமிழில் பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் --எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம் .பழனியில் இதற்கு மிகவும் சிறப்புண்டு
பழனிக் குமரனுக்கு மிகவும் பிடித்தது பஞ்சாமிர்தம்.
இது பழங்களின் கூட்டு என்று சொல்லலாம் .
முக்கியமாக மா பலா கொய்யா வாழை திராட்சை என்று ஐந்து வகைப் பழங்களால் செய்வார்கள் .
ஆதலினால் இது பஞ்சாமிர்தம் .
சொல்லைப் பிரித்தால் பஞ்ச + அமிர்தம் என்று ஆகும் . இது தமிழுக்கு தற்சம வழியில் வந்த வடமொழி
மணிப்பிரவாளச் சொல் .பஞ்ச பலம்(கனி ) கொண்டு அமிர்தமாக உருவாக்கப் படும் பிரசாதம் பஞ்சாமிர்தம்.
பஞ்ச என்றால் ஐந்து
அமிர்தம் என்றால் அமுது.
இந்தப் பொருள் கொண்டு தூய தமிழிலே பஞ்சாமிர்தத்தை செய்யலாமே !
ஆம் . பஞ்சாமிர்தம் =ஐந்து பழ-- ஐங்கனி அமுது
அடுத்த முறை பழனி செல்லும் போது பழனி முருகனை தரிசித்து "ஐங்கனி அமுது " பெற்று வாருங்கள் .
வாழ்த்துக்கள் .
---கவின் சாரலன்
இச் சொல்லாட்சியில் கவிதை தொடரும்