என் சுவாசக் காற்றே

கட்டளை மீறிய
என் விழிகள்
அவள் கயல் விழிகளை
காணத் துடித்தன

செயலிழந்து
நின்றது என் தேகம்
அவள் தேக சுகந்தம்
தன்னில் படரும் வரை

மனதுக்கு அணை கட்டினேன்
வெடிப்பில் சிதறிய
நீர்த் திவலைகளாய்
அவள் ஞ்சாபகங்கள்

கண்களால் கொள்கிறாள்
உடலால் மெல்கிறாள்
விலகிநான் சென்றாலும்
விடாது தொடர்கிறாள்
நெஞ்சில் நுழைந்து
என் நினைவைத் தைக்கிறாள்

என் ஜீவனே
உன்னிடம் நான் தந்தேன்
என் ஜீவனை

என்னோடு இருப்பாயா
இறுதி வரைக்கும்
நான் சுவாசிக்கும் காற்றாக

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (3-Apr-17, 1:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : en suvasak kaatre
பார்வை : 341

மேலே