அவளுக்காக
மலர் மேனித்தாள்எடுத்து
மனம் என்னும் மை நிரப்பி
கண் என்னும் பேனாவால்
காதல் என்னும் கவி படைத்தேன்
இதயமெனும் கோட்டையிலே
இனியவளைக் குடியமர்த்த
விண்மீன்கள் பூப்பறித்து
விதவிதமாய் அலங்கரித்தேன்
வெள்ளிநிலா விளக்கு வைத்தேன்
அல்லி மலர் அவள் வசிக்க
மேகத்து நூலெடுத்து
மெல்லியதோர் ஆடை நெய்து
வானவில்லின் நிறம் கொடுத்தேன்
வஞ்சிமகள் சூடிக்கொள்ள
கானத்து குயிலினையும்
கண்ணசைத்து வரவழைத்தேன்அவள்
குரல் கேட்டு அது பாட
வானத்து எல்லையினை
விலை பேசி வாங்கி வைத்தேன்
வளைந்தோடி விளையாட
இத்தனையும் செய்து வைத்தேன்
இளமகளின் உறவுக்காக
ஏக்கத்தோடு காத்திருக்கேன்
என்னவளின் வரவுக்காக