கதவு
நாணயங்களைப் பூட்டிவை உன்
நம்பிக்கையைப் பூட்டிவிடாதே
காசு பணமதைப்பூட்டி வை உன்
கண்களைப்பூட்டி விடாதே
மாசுள்ள எண்ணங்களைப்பூட்டி வை நல்ல
மனதைப் பூட்டிவிடாதே
காற்றைப் பூட்டிடக் கதவிருக்கா
மரணத்தைப் பூட்டிடும் மார்க்கமுண்டா
பாவம் உயிருள்ள மாந்தர்கள்
உயிரற்ற மரத்தின் மீது
நம்பிக்கை வைக்கிறார்கள் அது
வீட்டிற்கு காதவாயிருக்கும் வரை