மாயை

மண்ணழகா
விழும் மழையழகா
விண்ணழகா
விடியும் கதிரழகா
தாயழகா
ஈன்ற சேயழகா
நீயழகா
இல்லை நானழகா
எது அழகு
எல்லாம் புது அழகு
வளம் கொழிக்கும் நாள் வரைக்கும்
வாழும் பூமி அழகுதான்
வகையறிந்து கவிஞனுக்கு
வானமெல்லாம் அழகுதான்
காதல் கொண்ட நாள் வரைக்கும்
கன்னியரும் அழகுதான்
காதல் வற்றிக்கசந்து போனால்
கண்ணிலேது அழகுதான்
விழி இழந்த குருடனுக்கு
விளக்கிலேது அழகுதான்
விரக்தியான மனிதனுக்கு
விளக்க ஏது அழகுதான்
மாளதுணிந்த மனிதனுக்கு
மரணம் கூட அழகுதான்
மாறி வரும் உலகிலேது
மாறிடாத அழகுதான் !

எழுதியவர் : அசோகன் (3-Apr-17, 10:39 pm)
Tanglish : maiai
பார்வை : 70

மேலே