வெண்ணிலா இவள் பெண் நிலா
![](https://eluthu.com/images/loading.gif)
வஞ்சியர் மயங்கும் வான்நிலாத் தேகம்
வாய் மொழிந்தாள் ஒலித்தது இதயகீதம்
சிரித்தாள் மலர்ந்தது சிம்பொனியில் புதுராகம்
குழல் கலைந்தாள் அசைந்தது வான்மேகம்
அழகை ரசிக்க அருகே சென்றேன்
தேன்முல்லை வாசம் தேகமெங்கும் வீசும்
பளிங்கினால் செதுக்கிய பருவப் பூஞ்சிலை
அதரம் விரித்தாள் அழகாய்ச் சிரித்தாள்
தேன்துளிகள் ஊறிய செம்மலர் ஓடை
சிதறிய முத்துக்கள் என்தேக வீதியெங்கும்
ஆக்கம்
அஷ்ரப் அலி