ஐ லவ் யூ

”இன்று ஞாயிற்று கிழமை… ரீமா வீட்டில்தான் இருப்பாள்.. நம் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் “
சற்று டென்ஷனாகத்தான் அவள் வீட்டுக்கு சென்றான் ரகு…

நல்ல வேளை.. அவள் வீட்டில் இருந்தாள்
அதை விட நல்ல வேளை… வேறு யாரும் இல்லை..
“ வாங்க..என்ன திடீர்னு ..” அன்புடன் வரவேற்றாள்..
“ கொஞ்சம் பேசணும் “ தயங்கினான் அவன்..
டீ சாப்பிடபடியே மெல்ல சொன்னான் ..
“ ஐ லவ் யூ “

அவள் திகைப்புடன் அவனை பார்த்தாள்…
பின் சாதாரணமானாள்..
“ ஒகே. என் பதிலை இந்த வார இறுதிக்குள் சொல்றேன் “
“ ஏன் ,, நல்ல நாள் பார்க்கணுமா ? ..எதுவானாலும் சொல்லு “
“ நீங்க தர்க்கம், லாஜிக் படித்தவர்.. அதனால, என் பதிலை வித்தியாசமா சொல்ல நினைக்கிறேன்..

உங்களை லவ் செய்றதா இருந்தா, இந்த வார இறுதிக்குள் கண்டிப்பா சொல்வேன்.. அபப்டி நான் எதுவும் சொல்லலைனா , நான் லவ் செய்யலைனு அர்த்தம்…”
“ ஹேய்.. இந்த சஸ்பென்ஸ் எல்லாம் வேணாம் ..அட்லீஸ்ட் உனக்கு ஓகே வா இல்லை யானு க்ளு கொடு “
“ சரி.. நான் பதில் சொல்ல தேர்ந்தெடுக்கும் நாள் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.. இதுதான் க்ளு.. போய்ட்டு வாங்க “ ( ஆச்சரியம் என்றால் சர்பிரைஸ் surprise என அர்த்தம் )

வீட்டில் டென்ஷனாக யோசித்தான்… அவளும் லாஜிக்கில் கில்லாடி.. அவள் சொன்னதில் ஏதோ மேட்டர் இருக்கு….
இன்னும் எத்தனை நாள் இருக்கு..
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
சனி கிழமைக்குள்ள அவ சொல்லிடுவா… அந்த நாள் எனக்கு ஆச்சர்யமா இருக்கும்
வெள்ளிகிழமைக்குள் ஒரு நாளில்தான் அவ பதில் சொல்லி ஆகணும்… ஏனா வெள்ளிவரை சொல்லலைனா, சனி மட்டும் மிச்சம் இருக்கும்.. சோ, சனி கிழமை சொன்னா அதில் எந்த சஸ்பென்சும் இருக்காது.. ஆச்சர்யமா இருக்காது…
சனி ரூல்ட் அவுட் … மிச்சம் இருப்பது…
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி

சனி ரூல்ட் அவுட் ஆனதால், வெள்ளி ஆபிவ்யஸ் சாய்ஸ் ஆயிடுது… அந்த நாள் ஆச்சர்யம் இல்லை… சோ அதுவும் ரூல்ட் அவுட்..
மிச்சம் இருப்பது….
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
இப்போது புதன் கிழமைக்குள் சொன்னால்தான் உண்டு… மிச்சம் இருக்கும் ஒரு நாளான வியாழனில்தான் சொல்ல முடியும் என்ற நிலையில் அன்று சொன்னால் ஆச்சர்யம் இல்லை..
மிச்சம் இருப்பது…
திங்கள்
செவ்வாய்
புதன்
மேற்கூறிய அதே காரணத்தால் புதனும் ரூல்ட் அவுட்..
மிச்சம் இருப்பது,
திங்கள்
செவ்வாய்
வாவ்.. விடை தெரிந்து விட்டது…
திங்கள்தான் சொல்லுவாள்… ஏன் என்றால் திங்கள் அன்று சொல்லாவிட்டால், செவ்வாய் மட்டும் மிச்சம் இருக்கும்… அன்று சொன்னால் ஆச்சர்யம் இல்லை..
சரி,,இப்படி திங்கள்தான் என்பது தெரிந்து விட்டதே.. அப்போது அன்றும் ஆச்சர்யம் இல்லையே….
அவனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது…
அவளுக்கு காதல் பிடிக்கவில்லை..
அதை நாசூக்காக அப்படி சொல்லி இருக்கிறாள்..
ஆச்சர்யம் அளிக்கும் தினம் என்பது பாரடக்ஸ்..
அப்படி ஒன்று இல்லவே இல்லை…
எனவே அவள் பதில் சொல்லவே போவதில்லை,,,
விரக்தியுடன், தூங்கி போனான்..அடுத்த நாள் திங்கள் கிழமை… வேலைக்கு போக வேண்டும்..
ஏழு மணிக்குதான் எழுந்தான்..
அவசரமாக கிளம்பும்போது, ரீமா வீட்டிற்குள் நுழைந்தாள்..
“ என்ன இந்த நேரத்துல..அதுவும் திங்கட்கிழமை… வேலைக்கு கிளம்பலையா? “
“ உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.. நானும் உங்களை காதலிக்கிறேன் “

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது ….

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Apr-17, 7:22 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ai love yoo
பார்வை : 833

மேலே