ஆசானுமாகிய ஆதவன்
குன்றிலே ஏறி, ஒற்றைக்காலிலே நின்றாலும் சுட்டெரிக்கும் சூரியனை நெருங்குதல் என்பது இயலாத காரியமே....
சுட்டெரிக்கும் சூரியனைப் போன்ற நானுமொரு சூரியனே...
மடமையென்னும் இருள் நீக்கி பிரபஞ்சம் முழுவதும் அறிவென்னும் விளக்கிலே அன்பென்னும் அக்னியை உருவாக்குவதே என் கடமை...
இந்தச் சூரியனை நெருங்க எண்ணினால் அதுவும் வீண் கனவே...
என்றாலும் தனித்துவமாய் நீயும் ஒரு சூரியனாகி ஒளிரும் திறமை உன்னிடம் உண்டு...
ஏமாற்றி சூரியனாகிவிட இயலாது...
சுட்டெரிப்பது ஒன்றே சூரியனின் குணமென்று எண்ணுகையிலே சூரியனே ஆற்றல்களின் மூலம்...
என்றே உணர்ந்ததால் சூரியனை விடவும் மேன்மையான எதுவும் இருப்பதாகத் தோன்றாது போகவே சூரியனே தர்மம்....
பாரபட்சம் காட்டாத சூரியனே தர்மம்...
தர்மத்தின் மொத்த உருவம் என்றே சிந்தனையில் மூழ்க,
வடதுருவமும் தென் துருவமும் உறைந்த பனிக்கட்டியாய் இருப்பதாலேயே நாம் வசிக்க நிலம் உள்ளதென்று உணர்ந்தே சூரியனின் கருணையை மெச்சிச் சூரியனையே புகழ எண்ணினேன்...
புகழ்ந்த என்னையும் சுட்டெரித்த சூரியனிடம் கற்றேன் புகழ்ச்சிக்கு அடிமையாகாதே என்று...
எண்ணற்ற பாடங்களை சிறுவன் எனக்கு கற்றுத் தந்த சூரியனுக்கு மிக்க நன்றி....