மழை
நிலம் :
ஒரு தடவை வருவாயா
எந்தன் மேனி நனைத்திடவே
ஒரு தடவை வருவாயா
உன்னில் என்னை நனைத்திடவே
நானும் ஒரு செடியைப்போல
காய்ந்துவிட்டால் அழிந்திடுவேன்
எண்ணில் பல உயிர்கள் வளரும்
வளர்ந்த பிறகு மலர்கள் சிரிக்கும்
உன்னை ஒளிக்காதே என்னை அழிக்காதே
என்னை உயிருடன் நீயே கொள்ளாதே ...
மழை :
உன்னில் வாழும் உயிர்கள் யாவும்
உனக்கு சொந்தம் இல்லை
நீயும் வறண்டால் உயிர்கள் அழியும்
யாருக்கும் தெரிவதில்லை
நிலம் :
உனக்கும் எனக்கும் விழுந்த விரிசல்
தானாய் விழுந்ததில்லை
உணவை அளிக்கும் உழவன் வாழ்க்கை
உன்னால் அழிய வேண்டாம்
மழை :
ஐம்புலன் காக்கின்ற கடமையினை
மனிதன் செய்திட தவறிவிட்டான்
ஏரோடு வாழ்கின்ற உழவன் இன்று
நீயின்றி உயிர் வாழ போராடுறான்
நிலம் :
(ஒரு தடவை வருவாயா ...)
மழை :
அழிவை நெருங்கும் என்னை அழைக்க
உயிர்கள் துடிக்கின்றது
பசுமை இன்றி மழையும் இல்லை
என்பதறியாது ...
நிலம் :
நீயும் இன்றி எந்தன் மேனி
காய்ந்து போன சருகாகும்
என்னை உயிராய் நினைக்கும் உழவன்
உயிரும் அழிந்து போய்விடலாம் ...
மழை :
உன்னை அழித்திடும் உயிர்களுக்கா
என்னுடன் வாதம் செய்கின்றாய்
நிலம் :
உன்வரவை எதிர்ப்பார்க்கும் தோழி நானே
நீ இன்றி தரிசாகும் எந்தன் மேனி .....