அடுத்த சந்ததிக்காக --- புதுக்கவிதை
அடுத்த சந்ததிக்காக --- புதுக்கவிதை
இயற்கை அளித்த
அருட்கொடையை
இயன்ற அளவில் பாதுகாத்து
இனிமேல் வந்திடும்
சந்ததிக்கே என்றும்
இனிதாய் நாமும் அளித்திடுவோம். !!
சுற்றுப் புறத்தை நாமுந்தான்
சுத்தமாக வைத்திடுவோம் .
தூய்மையான பணியதனை
துணிந்தே நாமும் ஏற்றிடுவோம் . !
நஞ்சு கலந்த காற்றினையும்
நாளும் நாமும் சுவாசிக்க
எண்ண இயலாப் பற்பலநோய்
எந்த நாளும் நமைப்பிடிக்கும் .!!
மரத்தை நாமும் வளர்த்திடுவோம்
மலரும் அடுத்த சந்ததியுமே
மங்கா வாழ்வைப் பெற்றிடவே
மனிதநேயம் பேணிடுவோம் !!!
தூய்மையானக் காற்றினையும்
துன்பம் இல்லா வாழ்வினையும்
எந்த நாளும் பெற்றிடவே
எங்கும் நாமும் மரம் வளர்ப்போம் !!!
உயிரின் தோற்றம் நீராமே .
உன்னதமான நீரதுவும்
சொல்ல இயலா நிலையினிலே
சோபை இழந்து கிடக்கிறதே.!!
அறிவின் பயனாம் அறிவியலை
அழிவு தனக்கே கொள்ளாமல்
ஆக்கம் தனக்கே தான்கொண்டு
ஆன்ற வழியில் செயல்படுவோம் . !!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்