கரை கடந்தே நிற்கிறேன் உன் காதலுக்காக

இன்று ஒளிந்துகொண்டு நான் நிற்க அவன் கண்களோ என் வருகைக்காக நிற்க இருவிழியும் உயிரும் இலக்கணம் கடந்து செல்ல துடிக்க,இமைகளை ஒரு கணம் மூடி இயல்பாய் உதடுகள் இரண்டும் புன்னகை பூவை உதிர்த்து கொன்டே இருந்தனே.காதல் இந்த மழையில் நனைவதற்காக அடி எடுத்து வைத்தது.அவனின் கைகளை கேட்கிறாள் வெட்கங்களையும் வெளிஉலகத்தையும் மறந்து,அவனோ ஏனடி கைகள் நீட்டுகிறாய் என கேட்க செல்ல கோவம் கொன்டே தாக்குகிறாள்.அவளின் ராணுவ தாக்குதலையும் தாண்டி ,அவனின் ஸ்பரிசம் தொட்ட பூவையை மோக பார்வை கொண்டு தூண்டி விடுகிறான்.
அவர்களின் காதல் விளக்கை நன்றாய் எரிய வைக்க பார்வையிலே பதம் பார்க்கும் அவனை தடுக்காமலும்
தவிர்க்காமலும் தன்னிலை மறந்து இருவரும் நிற்கின்றனர்.
பேருந்தில் ஏறி இருவரும் பேச்சை தொடர நினைக்க அவளோ பேசாமடந்தையாய் மாறி இருந்தாள்.அவனின் தேகம் அவளை தொட்ட நொடியில் அணைந்தாள்.ஏற்றிய காதல் நெருப்பை அவன் முத்த நீருற்றி அனைத்துக்கொண்டிருந்தான்,அவளோ அவனுக்காக வாங்கி வந்த கிப்ட் ஐ தேடியே சளித்தாள்.அவனோ அவளின் தேகத்தை மணலாக சலித்தான்.கைகள் மேலும்ப அவளின் அணைப்பு அண்மையில் போய்விடாதே!!! என் அருகிலே வாழ்ந்து விடு உன் மூச்சு காற்றிலும் உன் உடல் தரும் வெப்பத்திலும் என்னை மெல்ல போர்த்தி கொள்கிறேன் உன் கைகளால் என சொல்லிக்கொண்டு இருந்தவனை புகைப்படம் எடுக்க சொன்னாள். செல்பேசியில் அவன் புகைப்படம் எடுக்க செல்லமாய் அவனை தொட்டு சிலையாய் இருவரும் நிற்க சீர் கொண்டும் தங்க தேர் கொண்டும் வருகிறான்.

எழுதியவர் : ஞானக்கலை (8-Apr-17, 12:32 am)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 510

மேலே