மையலாடுமுகம்

உன்
வேத இதழுதிர்க்கும்
வார்த்தைப் பறவைகளின்
கூச்சல் நெருஞ்சியெனவுள்ளம்
துளைக்குதடி!
அச்சங்கொண்டுயிவள்
மூடுஞ்சிறுவிழிகள்,
அண்டப் பேரழகையிழைத்துப் பூசியதோ?
மையலாற்றினிலே நானுந்தத்தளிக்க,
அண்மை நின்றொளிரும்
மகரக்குளத் தாமரையே!
தேர்மீதிலே நீ!
தெருவாகிறேன் நான்!
வசுவானவள் நீ!
பசுவாகிறேன் நான்!
மிசையாகிறாய் நீ!
பசியாகிறேன் நான்!
இரவிச்சுடரெடுத்து
இதயமெரிப்பவளே!
உன் இகுளையோடு
எனையிணைத்துக் கொள்ளடியே!
தமிழ்ப் பாமரன்
ரா.பெருமாள்

இரவி = சூரியன், இகுளை = சுற்றம்,
வசு = பசுவின் கன்று , மிசை = உணவு, மையல் = மயக்கம்/மோகம், அண்மை = பக்கம், நெருஞ்சி = நெருஞ்சி முள்,
மகரம் = தேவருலகம்/முதலை/சுறாமீன்.

எழுதியவர் : ரா.பெருமாள் (9-Apr-17, 4:35 pm)
சேர்த்தது : பெருமாள் ராஜா
பார்வை : 66

மேலே