படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

.
பாசம் காட்டி வளர்க்கிறாள் சிறுமி
நேத்திக்கடன் என்று
வெட்டிவிடாதீர்கள் !


எல்லா உயிர்களிடத்தும்
அன்பு செலுத்தும்
பெண்மை வாழ்க !


நிறமோ கருப்பு
பெயரோ
வெள்ளாடு !


கருப்பின் அழகை
போற்றும்
வெண்மை வாழ்க !


அன்பு செலுத்துவதில்
போட்டி
இருவருக்கும் !

எழுதியவர் : வாழ்க்கை (10-Apr-17, 1:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 137

மேலே