நட்பே புரிந்துக் கொள்ளாயோ எனது உணர்வுகளை

" நாயும் தான் நான்கு குட்டிகளை ஈன்று பாலூட்டி வளர்த்து திரிய விடுகிறது தெருத்தெருவாய். ", என்றே யாரோ கேட்க,
ஏதோ நினைவுக்கு வந்தவனாய், நாமும் நாயாகப் பிறந்துவிட்டோமோ?, இப்படி அலைகிறோமே என்று தோன்றவே,
மனித பிறவிக்கும், நாய் பிறவிக்கும் என்ன வித்தியாசமென்றே சிந்திக்க,
" பிறப்பால் யாவரும் ஒன்றும் தான். அவர் செய்யும் செயல்களும், பண்புகளுமே அவர் யாரென்பதை அடையாளம் காட்டும். ", என்றே திருக்குறளும் விளக்கம் தர, இதுவரை என்ன செய்தேன் நான் மனிதனென்று அடையாளம் கூற,
என்றே சிந்திக்க கண்களில் நீர் ததும்ப, " என்ன செய்வேன்? ஏழையாய் வாழ்வதே பெரும்பாடாய் இருக்கிறது. ", என்ற சலிப்பு வந்து மனதைத் தாக்க,
சொல்லும் செயலுமே சோர்ந்து போனதே....

மனோபலம் வேண்டும் இவ்வுலகிலே தனித்துவமாய் வாழ....
இல்லையேல் இவ்வுலகம் உரைக்குமே நீயொரு கோழை என்று.
என்றெல்லாம் சிந்தனை பலவாறு ஓட எதிலும் நாட்டமில்லாதவனாய், வெறுப்போடு நட்பின் மேல் கோபம் காட்ட, நட்போ புரியாது பிரிந்து சென்றதே....

ஏனிந்த வேதனை நெஞ்சே...
சாந்தமடைந்து தெளிவாயொரு முடிவை எடு....
செயலே வேண்டும்....
ஆக்கபூர்வமான செயலே வேண்டும்....
நட்பே அதற்கு உன் துணை வேண்டும்....
உடன் வருவாயா?....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Apr-17, 12:34 am)
பார்வை : 2997

மேலே