நட்பு- ஒரு குரு,சீடன் பெருநட்பு

குருவின் மீது சீடன் கொண்டிருந்தது
பெரும் மரியாதை மதிப்பு அன்பு
குருகுல போதனைகள் நடந்த
அந்த சரித்திர,இதிகாச காலத்தில்;
அந்த அரும்பெரும் நாட்கள் ஏட்டை
சற்றே புரட்டிப் பார்த்தால் நம்மை
உறுக்கிடும், சிலிர்க்கவைக்கும் சில
அறிய சம்பவங்கள் ; வாருங்கள்
பார்ப்போம்

இற்றைக்கு பாதி நூறு ஆண்டுகள் முன்னர்
திருஅரங்கத்தில் மாமுனி ராமானுஜன்
வைணவ விசிட்டா துவைத்ததை
புயல்வேகத்தில் பரவ வைத்த காலம்
சிவனே உலகம் என்றிருந்த சோழ
மாமன்னன் குலோத்துங்கன் இதை
மாமுனி ராமானுஜன் சைவத்திற்கு
இழைக்கும் மன்னிக்க முடியா குற்றம்
என்று நினைத்தான் ,அக்கணமே
ராமானுஜ மாமுனியை அரசவைக்கு
இழுத்துவர உத்தரவும் இட்டான்

அத்தருணம் குரு அவன் நீராட
காவேரி கரைக்கு சென்றிருக்கின்றார்
என்பது தெரிய ,பிரதம சீடன் கூறன்
எனும் கூரத்தாலவான் குரு அவர்கள்
மன்னன் அரசவை சென்றடைந்தால்
தண்டிக்கப்படுவர் நிச்சயம் இது என்று
அக்கணமே ஊகித்து, அக்கணமே
குருவை சிக்கலில் இருந்து காப்பாற்ற
முடிவொன்று எடுத்தான்

மாமுனி ராமானுஜர் துறவி
அவர் உடுப்பது காவி கூறன்
சீடன் அணிவது வெள்ளை வேட்டி
அவன் துறவியாகவில்லை
சற்றும் ஏதும் யோசிக்காமல்
தன குருவின் காவியுனி அணிந்தான்
அத்தருணம் அங்கு வந்த மன்னன் காவலர்
கூரேசனை ராமானுஜன் என்றெண்ணி
காஞ்சிக்கு அழைத்து சென்றார்
அங்கு அரசவையில் மன்னன் வேண்டி
கேட்டும் சைவத்திற்கு ஒப்புதல்
அளியாமையால் ,மன்னன் சினம் போங்க
ராமானுஜனாய் அங்கு சென்ற கூறன்
கண்கள் இரண்டும் கொய்யப் பட்டான்



அங்கோ, அரங்கத்தில் காவேரியில் குளித்துவிட்டு
தன குடில் அடைந்த மாமுனி தன்னை
காப்பாற்ற தன சீடன் தன உரு மாறி
காஞ்சி சென்றதை அறிந்தார் சொல்லொணா
வேதனை அடைந்தார் ; பின்னர் தனக்காக
தன பார்வையையே இழந்த சீடன் பற்றி
அறிந்தார் ,வேதனையால் செயல் இழந்தார்
துடி துடித்து போனார்

இந்த குரு சீடன் நட்பு
சரித்திரம் ஏட்டில் தாங்கிவந்து
நட்பில் தியாகத்தை விளக்கி
நமக்கு தெளிவுபடுத்துது பாரீர்
கேளீர், அறிந்திடுவீர் நட்பின் பாங்கை!

இந்த பெரும் நட்பின் நினைவில்
இன்றும் வைணவ தலங்களில்
இந்நாளில் வெள்ளை உற்சவம்
ஆண்டுதோறும் நடைபெறுகிறது
அன்று ராமானுஜருக்கு வெள்ளை அணிவித்து
சீடருக்கு காவி உடுத்தி ஊர்வலம் செய்வர்!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
ராமானுஜரே, கூரேசரே
உங்கள் நட்பு போல

இது ஒரு குரு-சீடர் நட்பின்
பெருமை பரப்பிடும் உண்மை கதை
சரித்திர ஏட்டை புரட்டி பாருங்கள்
இன்னும் அறிய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Apr-17, 4:28 pm)
பார்வை : 230

மேலே