எட்டு வண்ண வானவில் ---முஹம்மத் ஸர்பான்

தூவும் மேகம்
மேவும் நதிகள்
நடுவே பூக்கும்
பூக்கள் விந்தை

வானின் சாயம்
மின்னல் பாயில்
பனியின் புடவை
மலரின் கூந்தல்

மஞ்சள் படிந்த
மனதின் பக்கம்
குருதிக் கடலில்
நீந்தும் கப்பல்

நுங்கின் இளமை
பருவக் கனவில்
புற்றின் பாம்பு
களவின் தேர்வு

மீன்கள் பாயும்
குருட்டு நதியில்
முத்தின் பிறப்பு
வசந்த காலம்

இரவின் கதவில்
பகலின் வாயில்
நிழலில் கானல்
விதியின் மர்மம்

குற்றம் புரிந்த
காற்றின் துயர்
ஆற்றுகின்றது
புல்லாங்குழல்

வேரின் நுனியில்
படரும் பசளை
பசுமை தளிரின்
ரகசிய அஞ்சல்

ஒளியின் கருவில்
நிலவின் விளக்கு
ஆடை மாற்றும்
கிழக்கு வாசல்

கிரகம் நீங்கும்
சிகரம் போல
இனிமை துறந்த
பாலை பாவம்

வில்லின் எட்டாம்
வண்ணம் தேடி
ஏழாம் கண்டம்
கடந்தது நிலா

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Apr-17, 8:14 am)
பார்வை : 185

மேலே