உணர்ந்துகொள் என்னுயிரே
உணர்ந்துகொள் என்னுயிரே !!!
உணர்ந்துகொள் என்னுயிரே
உருவமில்லை காதலுக்கே !
குணமொன்றே பார்க்கின்ற
குலவிளக்கும் நீதானே !
பணமொன்றே பெரிதென்று
பாசத்தை விலைபேசா
மணமேடை தனில்நீயும்
மனமொத்தே வீற்றிருக்க
கணப்பொழுதும் உனைப்பிரிந்து
காளைநானும் வாழ்வேனோ !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்