மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும்

மனதினுள் நீயும்
உயிருக்குள் உன் நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை மறப்பது
சாத்தியமா?

சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே..
________________________________________________________
தினம் தினம்
ஒரு கவிதை எழுதுகின்றேன்
அதில் உன் நினைவுகளை தான்
தினமும் எழுதுகின்றேன்..

உன்னோடு வாழ்ந்த
காலங்களை விட
இன்று உன்
நினைவோடு வாழ்ந்த
காலங்கள் அதிகமாகிறது
தேடினேன் தேடினேன்
என் ஜீவன் தேயும் வரை
தேடினேன்..

ஆனாலும் -நீ
கிடைக்கவில்லை
உன்னை தேடும் விழிகளுக்கு
தினமும் ஏமாற்றங்கள் தான்
கிடைக்கின்றன
உன் பிரிவினால்

எழுதியவர் : (15-Jul-11, 3:52 pm)
சேர்த்தது : Sheenu
பார்வை : 469

மேலே